திரு. அசோகா என்பவர் திருப்பூரில் சொந்தமாக தொழில் நடத்தி வந்தவர் தொழில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தார் அந்த நேரத்தில் கடவுளை நோக்கி ஒரு கூக்குரல் இட்டார் அதாவது இத்தனை தெய்வங்கள் இருந்தும் யாரும் என்னை ஏன் காப்பாற்ற வரவில்லை?
ஒருவேளை எந்த தெய்வம் வந்து என்னை காப்பாற்றுகிறதோ அந்த தெய்வத்திற்கு ஒரு மிகப்பெரிய கோவில் கட்டுவேன் என்று திரு. அசோகா கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறார்.
அன்று இரவு கனவில் ஒளியின் ரூபத்தில் ஒரு தெய்வம் அசோகா அவருடன் பேசுகிறார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த உரையாடல் தொடர்கிறது, விடிந்ததும் ஒரே ஆச்சரியம் , இரவு நடந்தது உண்மைதானா நிஜமாலுமே கனவில் வந்து பேசியது கடவுள் தானா என்ற குழப்பம் அசோகா அவருக்கு இருந்தது.