Written by
godiseverywhere
மே 11, 2025 அன்று சுமார் 38,000 பக்தர்கள் புடைசூழ காலை 6 மணி முதல் மஹாயாகத்துடன் “கேளக்கியர் சித்தரின் பிராண பிரதிஷ்டை விழா” கோலாகலமாக நடைபெற்றது…
முதலில் கருப்பணசாமி சிலை காசி முதல் கன்னியாகுமரி வரை 35 தீர்த்த அபிஷேகத்துடன் கும்பாபிஷேகமும், பின் கேளக்கியர் சித்தரின் தீர்த்த அபிசேகத்துடன், கயிலாய வாத்தியம் முழங்க பிராண பிரதிஷ்டை விழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது…
பின்பு ராகா ஸ்ரீ இசைக்குழுவின் “பக்தி இசைக்கச்சேரியுடன் இன்னிசை விருந்தும்” “சிறப்பு அன்னதான விழாவும்” நடைபெற்றது….
அதே சமயத்தில் பக்தர்கள் கேளக்கியர் சித்தரின் தரிசனம் பெற்று விட்டு கேளக்கியர் சித்தரை உலகிற்கு அறிமுகம் செய்த அசோகா ஆஸ்ட்ரோ ஐயாவின் அருளாசியும் பெற்றனர்…
மாலையில் திருப்பூர் நற்பவி விழாக் குழுவினரின் “வள்ளி கும்மி ஆட்டம்” நடைபெற்றது.